Friday, June 20, 2008

கனாக் கண்டேன்..!

நீண்ட நாட்களுக்குப்பின் ஓர்
கனாக் கண்டே னம்மா
கண் இமைத் திறையில்
புதிய உலகம் கண்டேன்

சிகப்பு வெள்ளை பச்சை (hinduism,christianity,islam)
ஒருநாள் இணையக் கண்டேன்
எளியவரை நசுக்காத தர்மச்
சக்கரம் ஒன்று கண்டேன்

வெண் புறாக்கள் மட்டும்
விண்ணை அளக்க்க் கண்டேன்
துப்பாக்கிகள் வேலை இன்றி
துப்புறவு செய்யக் கண்டேன்

மக்கட் குறை தீர்க்கும்
ஓராட்சி நடக்க்க் கண்டேன்
இந்நாட்டு மன்னர்களுக்கு காத்திருக்கும்
மந்திரிஒருவர் வாழக் கண்டேன்

தேசநதிகள் இணைந் தோட
எங்கும் பசுமைபெறக் கண்டேன்
குடிமிச் சண்டை இல்லாக்
குழாய்யடி இருக்கக் கண்டேன்

எங்கும் சமத்துவம் வாழும்
தேசம் ஒன்று கண்டேன்
காதலுக்கு பூங்கொத்து மட்டும்
கொடுக்கும் கரங்கள் கண்டேன்

அந்திநேரம் ஏழையின் சிரிப்பு
ஒளியில் உன்கரம் பற்றி
நடக்கக் கண்டேன் கனாக்
கண்டேனம்மா கனாக் கண்டேன்

1 comment:

Anonymous said...

ஏழையின் சிரிப்பொளியில் உன்னவளின் கரம் பற்றிய கற்பனை புதிது