தவழ்ந்து பழகும் தென்றலின் மீது
நடந்து பழகஆசை - உனது புண்ணகையால்
மிதந்து பழகும் இதயங்களோடு நானும்
நீந்திப் பழக ஆசை.!
அரும்பு இதழ் விரிக்கும் ஓசை
கேட்டிட ஆசை - உனது மௌன
வாய் செவ்விதழ் பிரியும் இசை
கேட்டிட ஆசை.!
இருட்கதவை தட்டி எழுப்பும் சூரியக்கதிரை
பார்த்திட ஆசை - உனது ஒளிவீசும்
கண்களில் விளித்திட ஆசை.!
அதிகாலை குருவிக் கீச்சல்கள்
கேட்டிட ஆசை - உனது சோம்பல்
விரட்டும் காலை சிணுங்கல்கள்
கேட்டிட ஆசை.!
Wednesday, June 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
டேய் சரி இல்லையே, ரொம்ப ஃபிலிங்க்ஸ கொட்டிருக்க. யாருடா அந்த பொண்ணு ?
அண்ணா நீங்க வேற..ஏதோ தோணுச்சு..
Post a Comment