ஆழமான தோழா உனக்கென்
நட்பு நினைவில் உள்ளதா?
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம்கைகள் குலுங்கி பிரிந்த்திலிருந்து!
நீ தானா..?
அதே தோள்கள்; சற்று பருமல்
அதே கண்கள்; கண்ணாடி புதிது
அதே புன்னகை; உதட்டின் கருமை புதிது
அடே புகைப்பாயோ..??
புன்னகை பூத்த இடத்தில்
புகை ஏனடா இன்று ?
என்ன.. புகைப்பதை விட முடியவில்லையா..??
அன்றாடம் கையோடு இருக்க
ஆறாம் விரலா அது..?இல்லை
அழித்தாலும் அழி யாத
கை ரேகையா அது..??
சிகரெட் சுட்டவடு கையில் இருப்பது
சிகரம் தொடும் செயலென நினைத்தாயோ?
சொல்கிறேன் கேள்..
புகைப்பதால் உனது நுரையீரலில்
புற்று(cancer) கட்டி விடும்
மரணம் எனும் பாம்பு!
உனது கொள்ளிக்கு தினமும்
நீயே தீவைப்பது மடமையடா!
உதடுகள் புன்னகை வளர்க்க
மட்டும்; புகை வளர்க்க அல்ல...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Rav, "சொல்கிறேன் கேள்.." is nice da..
Post a Comment