Sunday, February 28, 2010

பாசத் தலைவனுக்கு...

உனக்கு தெரியாது..

உனக்கு தெரியாது..
எனக்கு உன்னைத்தான்
பிடிக்கும் என்று...
துடிக்கும் இதயத்தில்
உயிராகி விட்டாய்
சிமிட்டும் விழிகளில்
ஒளியாகி விட்டாய்..
எப்போது எந்நாளில்
என்மௌன உதடுகளில்
ஒலியாக போகிறாய்
என்காதல் நீதான்
என்று நான் சொல்ல!

உனக்கு தெரியாது..
எனக்கு உன்னைத்தான்
பிடிக்கும் என்று...!

-------------------------------------------
பாசத் தலைவனுக்கு

பாசத் தலைவனுக்கு..
பாசத் தலைவனுக்கு ஓர் கடிதம்
உலக பொது மறையாம்
திருக்குறளுக்கு புதிய உருவம்
அருளிய வாழும் ஓவிய
வள்ளுவனே - தன்மானம் கற்பித்த
பெரியாரின் வழி நடந்தவனே..
அண்ணாவின் வழியிலே தம்பிகள்
படைசூழ நீ நடத்திய தமிழ் போராட்டம்
படித்து வியந்தேன் - "வாழும் அரசியல்"
தலைவர்களில் "எனக்கு" தெரிந்து
உன்னைவிட தமிழையும் தமிழனையும்
நேசித்தவர் இல்லை என்பதால்
உன்னிடம் எனக்கொரு கேள்வி உண்டு!

பூக்கும் ரோஜாக்களின் எல்லாம்
மனித ரெத்தவாடை வீசுகிறதாம்
ஈழ பூமியில் இன்று..
தனிஈழம் நிலையில் இருந்து
அரசியல் தீர்வு என்று இறங்கிய
தமிழனை தோட்டாக்களால் துழைத்த
வெறியர்களை தடுத்திருக்க வேண்டிய
இந்தியா எதற்கோ பழி தீர்ப்பதுபோல்
வேடிக்கை பார்த்தபோது நீங்களும்
வேடிக்கை பார்ததைக்கண்டு அரண்ட
கோடிகளில் நானும் ஒருவன்...
இலாக்காவிற்கு காட்டிய ஆர்வத்தில்
இலங்கை தமிழனுக்கு காட்டியிருந்தால்
சிறுதேனும் தமிழன் வாழ்ந்திருப்பானேன்றே
பதறுகிறது இதயம்! இன்று
உதவிகளுக்காக வேண்டிநிற்கும்
எஞ்சிய தமிழனுக்கும் நிவாரண
உதவிகள் நிர்வானமாய் இருக்கிறது..
அவன் வாழ்வு சிறக்குமா? இல்லை
அவன் இனியாவது வாழ்வானா?
--------------------------------------------------

3 comments:

Unknown said...

simply superb, though i dint like the title...

Balachander said...

dei.. super da and unakku theriyathu is really super. I like the both and post other topics too....

Unknown said...

Unaku Theriyathu is simply superb!!Keep posting!!