Friday, June 20, 2008

கனாக் கண்டேன்..!

நீண்ட நாட்களுக்குப்பின் ஓர்
கனாக் கண்டே னம்மா
கண் இமைத் திறையில்
புதிய உலகம் கண்டேன்

சிகப்பு வெள்ளை பச்சை (hinduism,christianity,islam)
ஒருநாள் இணையக் கண்டேன்
எளியவரை நசுக்காத தர்மச்
சக்கரம் ஒன்று கண்டேன்

வெண் புறாக்கள் மட்டும்
விண்ணை அளக்க்க் கண்டேன்
துப்பாக்கிகள் வேலை இன்றி
துப்புறவு செய்யக் கண்டேன்

மக்கட் குறை தீர்க்கும்
ஓராட்சி நடக்க்க் கண்டேன்
இந்நாட்டு மன்னர்களுக்கு காத்திருக்கும்
மந்திரிஒருவர் வாழக் கண்டேன்

தேசநதிகள் இணைந் தோட
எங்கும் பசுமைபெறக் கண்டேன்
குடிமிச் சண்டை இல்லாக்
குழாய்யடி இருக்கக் கண்டேன்

எங்கும் சமத்துவம் வாழும்
தேசம் ஒன்று கண்டேன்
காதலுக்கு பூங்கொத்து மட்டும்
கொடுக்கும் கரங்கள் கண்டேன்

அந்திநேரம் ஏழையின் சிரிப்பு
ஒளியில் உன்கரம் பற்றி
நடக்கக் கண்டேன் கனாக்
கண்டேனம்மா கனாக் கண்டேன்

Saturday, June 14, 2008

Convocation Day

YAA..HOOOoo...!! I am a Degree Holder now!! Yesterday was my convocation day for my bachelor's degree in Computer Science and Engineering at Thiagarajar College of Engineering. Our convocation session was at 4.30 pm but I went to college in the morning itself to spend time with friends. We were all excited about getting the degree and we shared our holiday experiences. Took photos wearing the graduation robe.The function started at 4.30 at K.M., auditorium. We all there wearing the graduation robe and with lots of excitement. Dr. Ramadorai, CEO & MD of TCS was the chief guest of the session. It started with the Prayer followed by welcome address by our Principal and our college correspondent addressed the gathering. Then Dr.Ramadorai spoke on the corporates expectations from the young graduates. He stressed the importance of continual learning and creative thinking. Then students were given the degree certificates. At the end of the function, the new graduates took the graduation oath. Group photos were then taken and dinner was provided. On the night we went to Dhasavatharam film. The film was nice and once again Kamal showed his stature.

Wednesday, June 11, 2008

புன்னகை மட்டும் பூக்கட்டும்.! புகை அல்ல.!!

ஆழமான தோழா உனக்கென்
நட்பு நினைவில் உள்ளதா?
ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன
நம்கைகள் குலுங்கி பிரிந்த்திலிருந்து!

நீ தானா..?
அதே தோள்கள்; சற்று பருமல்
அதே கண்கள்; கண்ணாடி புதிது
அதே புன்னகை; உதட்டின் கருமை புதிது
அடே புகைப்பாயோ..??
புன்னகை பூத்த இடத்தில்
புகை ஏனடா இன்று ?

என்ன.. புகைப்பதை விட முடியவில்லையா..??

அன்றாடம் கையோடு இருக்க
ஆறாம் விரலா அது..?இல்லை
அழித்தாலும் அழி யாத
கை ரேகையா அது..??

சிகரெட் சுட்டவடு கையில் இருப்பது
சிகரம் தொடும் செயலென நினைத்தாயோ?

சொல்கிறேன் கேள்..
புகைப்பதால் உனது நுரையீரலில்
புற்று(cancer) கட்டி விடும்
மரணம் எனும் பாம்பு!
உனது கொள்ளிக்கு தினமும்
நீயே தீவைப்பது மடமையடா!

உதடுகள் புன்னகை வளர்க்க
மட்டும்; புகை வளர்க்க அல்ல...

Sunday, June 08, 2008

செவ்வானம்..!!

செவ்வானம்..!!

வாட்டிய வெயிலை
விரட்டிய போரில்
கொட்டிய குருதி
உறைந்த போர்க்களம்
செவ்வானம்..!!!

நீல வானம்
நிர்வாணம் கழைந்து
செவ்வாடை அணிந்தாளோ..?

Wednesday, June 04, 2008

ஏக்கம்..!!!

News Headlines: NASA's Phoenix retesting release of Martian Soil

அவர்களின் ஃபீனிக்சு
செவ்வாயில் இன்று
நமது அன்னம்
பறக்கப் போவது என்று..???

பெண்ணே..!

தவழ்ந்து பழகும் தென்றலின் மீது
நடந்து பழகஆசை - உனது புண்ணகையால்
மிதந்து பழகும் இதயங்களோடு நானும்
நீந்திப் பழக ஆசை.!

அரும்பு இதழ் விரிக்கும் ஓசை
கேட்டிட ஆசை - உனது மௌன
வாய் செவ்விதழ் பிரியும் இசை
கேட்டிட ஆசை.!

இருட்கதவை தட்டி எழுப்பும் சூரியக்கதிரை
பார்த்திட ஆசை - உனது ஒளிவீசும்
கண்களில் விளித்திட ஆசை.!

அதிகாலை குருவிக் கீச்சல்கள்
கேட்டிட ஆசை - உனது சோம்பல்
விரட்டும் காலை சிணுங்கல்கள்
கேட்டிட ஆசை.!

கல்லூரி..!!!

கல்லூரி்..!
கண் விளித்தால் எதிரே உன்முகம் தான்
கரம் உயர்த்தி் ஒளிவீசி புண்ணகைக்கிறாய்
இசையாக.! கண் மூடினாலும் - உன்
முகமே..அந்த இனிய நாட்கள்
எந்த பிறவியில் எப்போது இனிவரும்...??