Monday, December 13, 2010

வாழ்த்துக்கள் பல....!

""" காதல் திருமணத்தில், மணமக்களிடம் """

பாராட்டுக்கள்..
சாதனையாளர்கள் உங்கள் இருவருக்கும்!
சாதி வேலிக்கம்பிகளில் ஒன்று
சற்றே நெளிந்திருக்கிறது உங்களால் இன்று..!

பரிசுகள்..
காதலர்கள் உங்கள் இருவருக்கும்!
இது என்ன
புதுவகை புன்னகை இருவர் முகத்திலும்
அது நாணமா? இல்லை காதல் வெற்றிக்கு
இந்த மண்டபம் தந்த பரிசா?
எதுவாயினும் பத்திர படுத்துங்கள்
அழகாய் இருக்கிறது உங்களோடே இருக்கட்டும்..!

வாழ்த்துகள்..
புதியவர்கள் உங்கள் இருவருக்கும்!
நேற்று வரை ஒற்றுமைகள் காட்டி
உங்கள் வேற்றுமைகளை மறைத்து பூட்டி
வைத்திருக்கும் காதல்- திருமணம் இனி
வேற்றுமையும் திறந்து காட்டும்..
உயர் பொறுமை காத்து,
விடுதல் விடா இருப்பின்
நீங்கா ஆனந்தமும் தாழா கீர்த்தியும்
இல்முன் என்றும் காத்து நிற்கும்..!
வாழ்த்துக்கள் பல....